கிளுகிளுப்புடன் கடலை போட டிப்ஸ் எதிர்பார்ப்பவர்கள் அர்ஜென்டாக பின் வாங்கவும்.
தனியர்களாக இருந்தாலும் வாசிக்கலாம்தான். பின்னால் ஒரு நாள் பயன்படும்!
மழையில் வீட்டில் அடைந்த ஒரு நாள், வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் நாலாவது படிக்கும் என் பையனிடம், "அம்மா பற்றி உனக்குப் பிடித்த அஞ்சு பாயிண்ட் எழுது" என்றேன். மனைவி முறைத்தாள்.
என்னைத்தான்.
பையன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புதுக் கவிஞர் போல, பேனாவை வாயில் கவ்வி, பலமாக யோசித்தவுடன் எனக்கு வயறு கலங்கியது.
தேவை இல்லாமல் ஒரு பிரச்சினையை நானே கிளப்பி விட்டேனோ! வெளியே நல்ல மழை. தப்பிக்கவும் வழி இல்லை. மைக் டைசனிடம் மாட்டிய டக்ளஸ் போல விழித்தேன். சும்மாவே நல்லா காய்ச்சுவா, இன்னைக்கு கைமா தானா!
ம்! சாட்சிக்காரனிடம் தாஜா செய்வோம் என்று பையனைப் பார்த்தேன். சூர்யா ட்யூப் லைட் விளம்பரதாரர் போல என்னைப்பார்த்து சிரித்தான். விதியும் தான். "இந்தாங்கப்பா, படிப்பா" என்றான்.
அம்மா பாயிண்ட்ஸ்:
1. அம்மா, எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க் எழுதச் சொல்லுவாங்க.
1. அம்மா, எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க் எழுதச் சொல்லுவாங்க.
2. அம்மா, எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க.
3. நான் எது செய்தாலும் அதுல தப்பு கண்டுபுடிச்சு கரெக்ட் செஞ்சுகிட்டே இருப்பாங்க.
4. கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட விடவே மாட்டாங்க.
5. சூப்பரா, எனக்கு புடிச்சத்தை சமைச்சு தருவாங்க. எனக்கு உடம்பு சரியில்லைன்னா ஹோம் ஒர்க் எழுத வேண்டாம்னு சொல்லிடுவாங்க.
கடைசி பாயிண்ட் பார்த்ததும் தான் எனக்கு உயிர் வந்தது. " எவ்வளவு மரியாதையா எல்லா பாயிண்ட்லயும் "ங்க" போட்டு எழுதியிருக்கான் பாரேன்" என்று வழிந்தேன்.
ஸ்கட் ஏவுகணை போல , " அப்படியே உங்க அப்பாவை பத்தியும் அஞ்சு பாயிண்ட் எழுதறதுதானே" என்றாள்.
ஸ்கட் ஏவுகணை போல , " அப்படியே உங்க அப்பாவை பத்தியும் அஞ்சு பாயிண்ட் எழுதறதுதானே" என்றாள்.
சும்மா இல்லாம, வேலி ஓணானை வேட்டியில் விட்டது போல விழித்தேன்.
அப்பா பாயிண்ட்ஸ்.
1. அப்பா எப்பவும் காலேஜ் வேலையா இருப்பாங்க.
1. அப்பா எப்பவும் காலேஜ் வேலையா இருப்பாங்க.
2. டெய்லி லேட்டா வருவாங்க, வந்தாலும் போனும், கம்ப்யூட்டருமா இருப்பாங்க.
3. ஹோம் ஒர்க் பத்தி கேக்கவே மாட்டாங்க.
4. அப்பா என் கூட நெறைய நேரம் வெளையாடனும் ஆசையா இருக்கு.
கிச்சனில் ஒலித்த இடி சப்தம் கேட்டு, ஐந்தாவது பாயிண்ட் எழுத்துவதுற்குள் பையனின் கையை பிடித்தேன், "போதுண்டா, நெறைய எழுதினா கை வலிக்கும்" என்றேன் பயப் பரிவாக.
"நான் மட்டும் அவன் கிட்ட கெட்ட பெயர் வாங்கணும், நீங்க குட் பாயா இருப்பிங்களா? இனிமே அவன் ஹோம் ஒர்க் உங்க பொறுப்பு" என்ற மனைவியை, அம்மா பார்த்த அமைச்சர் போல, பயம் கலந்த பரிதாபத்துடன் பார்த்தேன்.
ஆனால், யோசிக்கையில் நாம் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் மிகக் குறைவே. அவர்களிடம் பேசுவது என்றால், படிச்சியா, சாப்பிடு, கேம்ஸ் போதும், தூங்கு, எழுந்திரு, விளையாண்டது போதும் வீட்டுக்கு வா, டீவி ஆஃப் பண்ணு, என்ன ஸ்னாக்ஸ் வேணும், டைரி சைன் வாங்கினியா போன்ற ஒன் லைனர்களே.
நம் குடும்ப வரலாறு, சுவாரசியமான சம்பவங்கள், பிள்ளைகளின் நண்பர்கள், அவர்கள் ஸ்கூல் ஜோக்ஸ், அவர்களின் கவலைகள்! ( மழை போதும்பா, நெறைய ஹோம் ஒர்க் தராங்க, கை வலிக்குது), படிக்க கதை புத்தகங்கள், விளையாட்டு எனப் பல தளங்களில் அவர்களை நாம் உணரலாம். அவர்கள் உலகில் நண்பர்களாக நாமும் சஞ்சரிக்க இது ஒரு வாய்ப்பு.
பின்குறிப்பு: இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது 2012ல்.
இதைப் பதிவிடும் முன் மனைவியிடம் காட்ட,
"திரும்பவும் மொதல்லேருந்து படிங்க. இப்பவும் அப்படியேத்தான் இருக்கீங்க!!" என்றாள் மனைவி.
"திரும்பவும் மொதல்லேருந்து படிங்க. இப்பவும் அப்படியேத்தான் இருக்கீங்க!!" என்றாள் மனைவி.
"வெளிய மழை விட்டிருக்கும்ல!".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக